டிரெண்டிங்

இரக்கத்துக்கு ஒரு முகம் இருந்தால்... உணவுக்கடை வியாபாரியின் அடடே செயல்..!!

இரக்கத்துக்கு ஒரு முகம் இருந்தால்... உணவுக்கடை வியாபாரியின் அடடே செயல்..!!

JananiGovindhan

மனிதநேயம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு நவீன காலம் பலரையும் மாற்றியுள்ளதற்கு சான்றாக பலவிதமான மனிதநேயமற்ற நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலவுவதை காண முடிகிறது.

இப்படியான சூழலில் “சக மனிதருக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி பாரதியின் கூக்குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் தள்ளுவண்டியில் வைத்து உணவு வியாபாரம் செய்யும் ஒருவரின் செயல் 20 லட்சத்துக்கும் மேலானோரால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இரக்க குணமும், சுயநலமற்ற எண்ணமும்தான் மனிதனாக பிறந்தவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட குணாதிசயங்கள் தற்போது நவீன ஓட்டப்பந்தைய காலத்தில் காணக் கிடைப்பதெல்லாம் ஆச்சர்யமாகத்தான் பார்க்கப்படும்.

அந்த வகையில் ரஜத் உபாஷ்ய என்பவரின் foodbowls என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், தள்ளுவண்டியில் வைத்து உணவு விற்றுவரும் வியாபாரி ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக உணவு கொடுத்துள்ள நிகழ்வு பகிரப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோ போஸ்ட்டின் கேப்ஷனில், “மனோஜ் பாய்க்கு பெரிய மனது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் உணவு வியாபாரியின் பரந்த மனதை பாராட்டி வருகிறார்கள்.