டிரெண்டிங்

கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலையளிக்கிறது - ஸ்டாலின்

webteam

 கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலையளிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும். கொரோனாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அரசு மதுபான கடைகளைத் திறந்தது வேதனை அளிக்கிறது. அரசின் அலட்சியத்தால் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகரித்து வரும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலையளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறியதற்கு ஆதாரம் உள்ளது. கொரோனா தொற்று குறித்த தகவல்களை மறைக்கும் அரசின் போக்கு ஆபத்தானது" எனத் தெரிவித்துள்ளார்.