டிரெண்டிங்

குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படம் பேரவையிலா! ஸ்டாலின் எதிர்ப்பு

குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா படம் பேரவையிலா! ஸ்டாலின் எதிர்ப்பு

webteam

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து, பேரவையின் மாண்பை குலைக்கக்கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பாக திகழும் சட்டப்பேரவையில் ஜெ‌யலலிதாவின் படத்தை பேரவைத் தலைவர் திறந்து வைப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக் கூறியுள்ளா‌ர். குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் திறந்து வைப்பது சட்டப்பேரவை ‌வரலாற்றில் கருப்பு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அவசர அவசரமாக இந்த படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கக்கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.‌ மேலும், நீட் தேர்வு வேண்டும் என்றும், அரசியலில் ரஜினியும் கமலும் தனக்கு ஜூனியர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.