டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தொழிலதிபர்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தொழிலதிபர்

kaleelrahman

மோகனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் ஒருமாதத்திற்கான உணவு பொருட்களை நாமக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காளியம்மன் கோவில்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவர், கொரோனா காலத்தில் வேலையை இழந்தார். இதனால் வருமானம் இன்றி தவித்த தங்கபாண்டியன், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன், மகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் தங்களுக்கு உதவிடக்கோரி தங்கபாண்டியன் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கையை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இதையடுத்து நாமக்கல்லை சேர்ந்த லட்சுமி ஏஜென்ஸிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சந்தர், தங்கபாண்டியன் குடும்பத்திற்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் உதவ முன்வந்தார்.

இதன்மூலம், தங்கபாண்டியனின் குடும்பத்திற்கு தேவையான 25கிலோ அரிசி, பருப்பு, புளி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை சந்தர் வழங்கி பேருதவி புரிந்தார். கொரோனா காலத்தில் உதவி புரியவும், கொரோனா காலத்தில் தங்களது குடும்பத்திற்கு உதவிய புதிய தலைமுறைக்கு இருவரும் நன்றி தெரிவித்தனர்.

புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்