டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய சமூக ஆர்வலர்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய சமூக ஆர்வலர்

kaleelrahman

மதுரையில் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைத்தது.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான செல்வன் பாண்டியன் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில், புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை குழுவிற்கு உதவி வேண்டும் என கோரியிருந்தார்,

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை குழுவுடன் மதுரை ஆரப்பாளையும் பகுதியை சேர்ந்த குடைவீடு அருண்குமார் என்ற சமூக ஆர்வலர் தனது சொந்த செலவில் 15 நாட்களுக்கு தேவையான அரசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினார்.

இதனையடுத்து உதவிக்கரம் நீட்டியவருக்கும் புதிய தலைமுறைக்கும் மாற்றுத்திறனாளி தனது நன்றியை தெரிவித்தார்.