டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: கொரோனா பேரிடரில் தவிப்போருக்கு ரூ.42,000 வழங்கிய நல்லுள்ளங்கள்!

துளிர்க்கும் நம்பிக்கை: கொரோனா பேரிடரில் தவிப்போருக்கு ரூ.42,000 வழங்கிய நல்லுள்ளங்கள்!

Veeramani

'புதிய தலைமுறை'யின் முன்னெடுப்பான 'துளிர்க்கும் நம்பிக்கை' இயக்கம் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பொதுமக்களும் தன்னார்வலர்களும் பல்வேறு வழிகளில் கொரோனா பேரிடரில் தவிப்போருக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.42,000 நன்கொடையாக பெறப்பட்டது.

சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் ரூ.25,000, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர் ரூ.10,000, சென்னை அண்ணா நகரை சேர்ந்த சுகந்தி மற்றும் மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த ஜோதிமணி ஆகியோர் தலா ரூ.5,000-ஐ நன்கொடையாக வழங்கினார்கள். இவர்கள் மட்டுமின்றி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களும் 'புதிய தலைமுறை' அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சேகரிக்கப்பட்ட மளிகைப் பொருட்களை எல்லாம் தரம் பார்த்து பேக்கிங் செய்யப்பட்டது. அதில் 20 கிலோ அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, மிளாகாய், டீ தூள், புளி, பிஸ்கட், சோப்பு என 22 பொருட்கள் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள இந்திரா குடும்பத்தினர், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராகினி ஜெயபால் குடும்பத்தினர், பெரம்பூரைச் சேர்ந்த லதா மற்றும் வெங்கடேஷ் குடும்பத்தினர், வியாசர்பாடி கண்ணதாசன் நகரைச் சேர்ந்த மோகனசுந்தரம், கற்பகம் குடும்பத்தினர், பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த ரஷீத் குடும்பத்தினர் முதலானோர் இந்த உதவிகளைப் பெற்றவர்களில் சிலராவர்.

'புதிய தலைமுறை'யின் 'துளிரும் நம்பிக்கை' இயக்கத்துக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு தந்து பல்வேறு உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.