டிரெண்டிங்

சவாலான நேரத்தில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றார்: சோனியா பேச்சு

சவாலான நேரத்தில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றார்: சோனியா பேச்சு

rajakannan

சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றுக் கொண்டதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சோனியா காந்தி, “நாம் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். தனிப்பட்ட பிரச்னைகளுக்கான நேரம் இதுவல்ல. தற்போது புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதில் நாம் எதிர்கொள்ள வேண்டியது வழக்கமான சவால்கள் அல்ல. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் வெளியிடுவோம். ராகுல் தலைமையில் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்றார்.

ராகுல் காந்தி பேசுகையில், “நாட்டில் வெறுப்பும், கோபமும் பரப்பப்படுகிறது. இந்தியாவை ஒருங்கிணைத்து ஒற்றுமையை ஓங்கச் செய்வது காங்கிரஸ் கட்சியின் கடமை. பாரதிய ஜனதா மக்கள் மத்தியில் கோபத்தை பரப்பி அவர்களை பிரிக்கிறது. நாடு அனைவருக்கும் சொந்தமானது என்றும் காங்கிரஸ் கட்சி எதை செய்தாலும் அது அனைவரின் நன்மைக்காகவே இருக்கும். நாடே சோர்ந்து மீள்வதற்கு வழி தேடிக்கொண்டிருப்பதாகவும், அந்த வழியை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே காட்ட முடியும்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோனியா காந்தி பேசி முடித்ததும் மேடையில் இருந்து இறங்கி ராகுல் காந்தியை கட்டித் தழுவினார்.