டிரெண்டிங்

இந்து அல்லாதவர் பதிவேட்டில் கையெழுத்திட்டாரா ராகுல் காந்தி?

இந்து அல்லாதவர் பதிவேட்டில் கையெழுத்திட்டாரா ராகுல் காந்தி?

webteam

இந்து அல்லாதவர் வருகைப் பதிவேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அங்குள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்று அவர் வழிபாடு செய்தார். அக்கோயிலில் உள்ள வருகை பதிவேட்டில், இந்து அல்லாதோர் வருகை பட்டியலில்  ராகுல் காந்தி கையெழுத்து இட்டதை குறிக்கும் விதத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாஜகவினரால் இந்தப் புகைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜகவின் குஜராத் மாநிலத் தலைவர் ராஜு தருவ் இதுகுறித்து, “ராகுல் காந்தி தொடர்ச்சியாக கோயில்களுக்கு செல்கிறார். காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்கிறது. கோயில் வருகைப் பதிவேட்டில் அவர் இந்து இல்லை என குறிப்பிட்டு உள்ளார்” என்றார்.

இந்த விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி, ட்விட்டரில் குறிப்பிட்ட புகைப்படத்தை வெளியிட்டு, சோம்நாத் கோயிலில் ஒரு வருகைப் பதிவேடு மட்டுமே இருந்தது. அதில்தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டார் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த சுர்ஜேவாலா, இப்போது வெளியாகி உள்ள கையெழுத்து மாறுபட்டது. அது ராகுல் காந்தியின் கையெழுத்தும் இல்லை. புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள விண்ணப்ப நகலும் கோயிலில் வழங்கப்பட்டது கிடையாது என்று கூறி மறுத்துள்ளார்.