மாநகர, நகர பகுதிகளை காட்டிலும் கிராமபுறத்தை உள்ளடக்கிய பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்து வருகிறது. ஆனால் மாநகர, நகரப் பகுதிகளில் மந்த நிலையே நிலவுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த நிலையில் பிப் 19-ம் தேதியான இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அரசில் கட்சியினர், சுயேட்சை உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கான பிரச்சாரத்தையும் பல்வேறு வகைகளில் முன்னெடுத்து வந்தனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேர்ணாம்பட் என 2 நகராட்சிகளுக்கும், ஒடுக்கத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் என 4 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 01.00 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் மாநகர, கிராமப்புற மக்களை காட்டிலும் அதிக கிராமப்புரங்களை உள்ளடக்கிய 4 பேரூராட்சிகளிலுமே வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
மதியம் 01.00 மணிவரை 36.07% வாக்குப்பதிவு
வேலூர் மாநகராட்சி - 36.86%
குடியாத்தம் நகராட்சி- 38.23%
பேர்ணாம்பட் நகராட்சி- 35.72%
ஒடுக்கத்தூர் பேரூராட்சி -52.51%
பள்ளிகொண்டா பேரூராட்சி- 47.27%
பென்னாத்தூர் பேரூராட்சி- 55.14%
திருவலம் பேரூராட்சி- 58.20%
மொத்தம் -36.07%
காலை 11.00 மணி வாக்குப்பதிவு நிலவரம்
வேலூர் மாநகராட்சி - 19.84%
குடியாத்தம் நகராட்சி- 23.35%
பேர்ணாம்பட் நகராட்சி- 15.14%
ஒடுக்கத்தூர் பேரூராட்சி -33.84%
பள்ளிகொண்டா பேரூராட்சி- 24.18%
பென்னாத்தூர் பேரூராட்சி- 29.94%
திருவலம் பேரூராட்சி- 40.45%
மொத்தம் -20.77%
காலை 9.00 மணி வாக்குப்பதிவு நிலவரம்
வேலூர் மாநகராட்சி - 8.61%
குடியாத்தம் நகராட்சி- 10.18%
பேர்ணாம்பட் நகராட்சி- 3.48%
ஒடுக்கத்தூர் பேரூராட்சி -15.28%
பள்ளிகொண்டா பேரூராட்சி- 11.16%
பென்னாத்தூர் பேரூராட்சி- 14.02%
திருவலம் பேரூராட்சி- 18.04%
மொத்தம் -8.82%
குறிப்பாக வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த பணியும் முழுமையாக நிறைவேறாததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும். சாலைகள் மிக மோசமான நிலையிலும், கழிவு நீர் தேங்கியும், மழை காலங்களில் மாநகரின் பல பகுதிகள் மழை காலங்களில் வீடுகளுக்கு தண்ணீர் பூகுவதுமாக இருந்து வருகிறது யாரும் இதை கண்டு கொள்வது இல்லை, இந்த தேர்தலில் வெற்றி பெறுவோர் இவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதேபோல தான் குடியாத்தம், பேர்ணாம்பட் நகர பகுதிகளிலும் சாலை, கழிவு நீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் இருப்பதாகவும் வெற்றி பெறுபவர் அதனை தீர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அந்நகர மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பிரச்னைகள் அதிகம் உள்ள மாநகர, நகரப் பகுதியில் மக்கள் ஆதங்கம் தெரிவித்திருந்த நிலையில் இந்த பகுதிகளில்தான் காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக நடைநெற்று வருகிறது. ஆனால் பேரூராட்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.