டிரெண்டிங்

தஞ்சை பெரிய கோயிலில் ஒலித்த தமிழ்.. பெருவுடையாருக்கு தமிழில் வழிபாடு .!

தஞ்சை பெரிய கோயிலில் ஒலித்த தமிழ்.. பெருவுடையாருக்கு தமிழில் வழிபாடு .!

kaleelrahman

தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தவிழா கொரேனா தொற்றின் காரணமாக இன்று ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது.


இந்த சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதிஉலா மற்றும் அரசு சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு தேவாரம் திருவாசகம் பாடி நிகழ்வுகள் தொடங்கப்பட்டது. மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது . இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஏற்கெனவே அறிவித்த வாக்குறுதியின் படி இன்று தமிழில் வழிபாடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.