டிரெண்டிங்

என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது: பாரிவேந்தர் வலியுறுத்தல்

rajakannan

இலாபத்தில் இயங்கும் நெய்வேலி என்.எல்.சி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வலியுறுத்தி உள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமானது ஏற்கெனவே 5 சதவிகித பங்கை தனியாருக்கும், 5 சதவிகித பங்கை தமிழக அரசுக்கும் விற்றது. இந்நிலையில், மீண்டும் 5 சதவிகித பங்கை தனியாருக்கு விற்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று முன்தினம் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐஜேகே தலைவர் பாரிவேந்தரும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகும் என தெரிவித்துள்ளார். இதனால், மின்சாரக் கொள்முதலில் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.