டிரெண்டிங்

எல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள்

எல்லைப் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த ராணுவ வீரர்கள்

webteam

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள சியாச்சின் மற்றும் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்குப்பதிவு செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்கு முன் தேர்தலில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவிட்டனர். அந்தவகையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியின் சியாச்சின் மற்றும் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ராணுவத்தில் எல்லைப் பகுதியில் பணியாற்றும் வீரர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் அவர்கள் ஆன்லைனில் வாக்குச்சீட்டை தரவிறக்கம் செய்து வாக்களித்து தபால் மூலம் தங்களது தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பும் முறையை தேர்தல் ஆணைய அறிமுகபடுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சியாச்சின் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த முறைப்படி அவர்கள் தங்களின் வாக்குச்சீட்டை தரவிறக்கம் செய்து வாக்களித்து தபால் மூலமாக அனுப்பியும் வைத்துள்ளனர்.