டிரெண்டிங்

‘சேவாக் போட்டியிட மறுத்துவிட்டார்’ - டெல்லி பாஜக தகவல்

‘சேவாக் போட்டியிட மறுத்துவிட்டார்’ - டெல்லி பாஜக தகவல்

webteam

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட மறுப்பு தெரிவித்தாக டெல்லி பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. பல கட்சிகள் தங்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. அத்துடன் சில அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த ஆராம்பித்துள்ளன. 

இந்நிலையில் டெல்லியில் பாஜக சார்பில் போட்டியிட விரேந்திர சேவாக் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து டெல்லியிலுள்ள பாஜக தலைவர்களில் ஒருவர், “வீரேந்திர சேவாக் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். ஆனால் கவுதம் கம்பீர் இன்னும் பரிசிலனையில் உள்ளார். அவர் டெல்லியின் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. சேவாக் வேட்பாளராக நிற்கவில்லை என்றாலும் அவர் எங்களின் நட்சத்திர பிரச்சார நபராக வரவாய்ப்புள்ளது. ஏற்கெனவே சேவாக் தன் சகோதரிக்காக நகராட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளார். அதனால் அவருக்கு பிரச்சாரம் அனுபவம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர் ஓய்வினை அறிவித்த போது, பிரதமர் மோடி அவருக்கு ஒரு பாராட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், கம்பீரின் விளையாட்டு குறித்து பாராட்டியிருந்தார். அத்துடன் அவர் அவ்வப்போது செய்யும் சமூக நல உதவிகளை பெரிதாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் உங்களது ஓய்வு மற்றொரு புதிய இன்னிங்கிஸ்க்கான தொடக்கம் என்பதாகவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். இதனால் கம்பீரை பாஜகவில் இணைவார் அனைவரும் எதிர்பார்த்தனர். அத்துடன் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்த்தனர். இருப்பினும், கம்பீர் இதுவரை வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.