மதுரையில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் விற்கப்படும் விதைப் பிள்ளையார் சிலையை மக்கள் ஆர்வத்துட்டன் வாங்கிச் செல்கின்றனர்.
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள நிலையில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் வீடுகளிலேயே விநாயகர் சிலையை கொண்டாடும்படி அரசு அறிவித்துள்ளதால் களிமண்ணால் ஆன சிறிய சிலைகளை மக்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.
அந்த வகையில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பாக களிமண் மற்றும் விதை பிள்ளையார் சிலைகள் தயாரிக்கப்பட்டு மதுரையில் விற்பனை செய்யப்படுகின்றன. மதுரை உழவர் சந்தையில் விற்கப்படும் இந்த விதை பிள்ளையார் சிலை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ரூ.150 மதிப்புள்ள இந்த பிள்ளையார் சிலைகள், வெளியே 500 முதல் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், தோட்டக்கலைத் துறையில் விதை விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர்.