தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பதற்றமான தொகுதியாக கருதப்படும் சென்னை எழும்பூர் தனித்தொகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் துணை ராணுவப்படையினர் உட்பட 1.58 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கக்கூடிய ஓர் இடமாகவும் இந்த வாக்குச்சாவடி மையம் செயல்பட்டு வருவதால் எழும்பூர் காவல்நிலைய போலீஸார் இங்கு முதல்கட்டமாக பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை எல்லையில் 1349 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கணிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை மேற்பார்வையில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 50% துணை ராணுவத்தினர், 50% காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 235 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையைப் பொருத்தவரை 18 கம்பெனி துணை ராணுவத்தினர் உட்பட 30000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 3000 சிசிடிவி கேமிராக்கள் வாக்குச்சாவடி மையங்களில் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு புகாருக்கு 044 - 23452437 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.