டிரெண்டிங்

கர்நாடக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 

கர்நாடக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 

webteam

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் அம்முடிவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி முதலில் 10 எம்எல்ஏக்களும் பின்னர் 5 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக நேற்று கர்நாடகா சட்டப் பேரவையில் வரும் வியாழக்கிழமை முதலமைச்சர் குமாராசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சபாநயகர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.