டிரெண்டிங்

கோவை: உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.17.5 லட்சம் பறிமுதல்

கோவை: உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.17.5 லட்சம் பறிமுதல்

Veeramani

கோவை சுங்கம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரிடம் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.17.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை கோவை 82வது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் பகுதியில் காரை மறித்து மத்திய மண்டல பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர், அப்போது காரில் 3 பேர் இருந்தனர். அவர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 17.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா ஹமீது (42) என்ற தனியார் நிறுவன ஊழியர், கோவையில் நிலம் வாங்க கிரையம் செய்வதற்காக பணத்துடன் உறவினர்கள் 2 பேருடன் வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.