டிரெண்டிங்

ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் மதுசூதனன்

ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் மதுசூதனன்

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த ஏப்.14 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக அணிகள் பிளவுபட்டு இருந்தால் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனன் வேட்பாளராக களமிறங்கினார். பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. தற்போது அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. சமீபத்தில் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அதிமுக அலுவலகத்தில் மதுசூதனன் அளித்தார். தற்போது அதிமுவில் ஆட்சி மன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோர் ஆட்சி மன்றக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், மதுசூதனன், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் ஆகியோர் அக்குழுவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளனர். ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் புதிய ஆட்சிமன்றக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.