டிரெண்டிங்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் மனு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் மனு

webteam

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைதேர்தலை விரைவில் நடத்த, உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதி 6 மாதத்திற்கு மேல் காலியாக உள்ளதால் உடனடியாக தேர்தலை நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க வேட்பாளர் தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டு தினகரன் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சட்டமன்ற தொகுதி காலியாகும்போது 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு பணம் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.