டிரெண்டிங்

பிரசாரத்திற்கு வராத அதிமுக தலைவர்கள்... கவலையில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர்!

பிரசாரத்திற்கு வராத அதிமுக தலைவர்கள்... கவலையில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர்!

kaleelrahman

ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவினரை அரவணைத்து பிரச்சாரம் செய்வதில் பாஜகவினருக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் பாஜக வேட்பாளரின் பிரச்சாரத்தில் தொடர்ந்து மந்தநிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக வசம் இருந்த ராமநாதபுரம் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளதால் அதிமுக-வினரிடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இந்தமுறை தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்னமும் வரவில்லை. அதனால் தான் மத்திய இணைஅமைச்சர் வி.கே.சிங் மணிகண்டன் வீட்டிற்கே சென்று அவரது தந்தையான அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாராங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இருந்த போதும், மணிகண்டன் இதுவரை களத்திற்கு வரவில்லை. முன்னாள் எம்.பி.யும், அதிமுக மூத்த தலைவருமான அன்வர் ராஜாவும் பிரச்சாரம் மேற்கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்லப்படுகிறது. தொகுதியில் அ.தி.மு.கவினரின் ஆதரவு முழுமையாக கிடைக்காத நிலையில் பாஜக வேட்பாளர் குப்புராமு மற்றும் பாஜகவினர் திணறி வருவதாக கூறப்படுகிறது.

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினரை பிரசாரத்தில் பங்கேற்க செய்யும் முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க இராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சத்தமில்லாமல் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார்.