டிரெண்டிங்

14-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

14-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

Rasus

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராம்நாத் கோவிந்த்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கை குலுக்கி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

பதவியேற்ற பின் தனது முதல் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "குடியரசுத் தலைவர் பொறுப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. பணிவுடன் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து, பணியை திறம்பட மேற்கொள்வேன். ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் வழியில் செயல்படுவேன். எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர் பதவிக்கு வந்துள்ளேன். சாதாரண குடிமக்களே நாட்டை செதுக்குகின்றனர். 125 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து செயல்படுவேன்" என தெரிவித்தார்.