டிரெண்டிங்

ராம்நாத் கோவிந்த்- மீரா குமார் ஒப்பீடு

ராம்நாத் கோவிந்த்- மீரா குமார் ஒப்பீடு

Rasus

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராம்நாத்தும், காங்கிரஸ் தலைமையிலான 17 கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் குடியரசுத்தலைவர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் குறித்து தெரிந்து கொள்வோம்.

*உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தின் சமர் பிரிவில் பிறந்தவர் ராம்நாத் கோவிந்த். பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் தலித் சமூகத்தில் பிறந்தவர் மீரா குமார்.

*ர‌ம்நாத் கோவிந்துக்கு வயது 7‌1. மீராகுமாருக்கு வயது 72.

*வழக்கறிஞராக இருந்து கட்சிக்குள் வளர்ந்தவர் ராம்நாத் கோவிந்த். ஐஎப்எஸ் அதிகாரியாக பல நாடுகளில் பணிபுரிந்தவர் மீராகுமார்.

*இருமுறை மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்நாத். ஐந்துமுறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீராகுமார். ஒருமுறை மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

* பீகார் ஆளுநராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்த், குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டின் முதல் பெண் மக்களவை சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர் மீராகுமார்.