டிரெண்டிங்

பசுவை கொன்றால் ஆயுள்தண்டனை: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரை

பசுவை கொன்றால் ஆயுள்தண்டனை: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரை

webteam

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமைகள், கன்றுடன் கூடிய பசுமாடுகள், எருமைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தற்போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.