டிரெண்டிங்

அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா

அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா

webteam

அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயற்சிக்கவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜக-வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே அதிமுகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைய வேண்டும் என பாரதிய ஜனதா விரும்புவதாக டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ இப்போதைய அதிமுகவை நம்பி தேர்தலை சந்தித்தால் தோல்வியை தழுவோம் என பாஜக எண்ணுகிறது. இது காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்பதால் அதிமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய வேண்டும் என பாஜக எண்ணுவதாக ஒரு செய்தி உலா வருகிறது.

அதிமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தால் நல்லதுதான். அதிமுக- அமமுக பிரிந்திருந்தால் திமுக கூட்டணி வெற்றிபெற்றுவிடுமோ என்ற எண்ணத்தில் பாஜக காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள்.” என தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயற்சிக்கவில்லை என தெரிவித்தார்.