ராகுல் காந்தி பொதுமக்களை கவர்வதற்காக ஒரு கோமாளியை போல செயல்படுகிறார் என பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.
"தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ராகுல் காந்தி பொதுமக்களை கவர்வதற்காக ஒரு கோமாளியை போல செயல்படுகிறார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தலைவரை தேடுகிறார்களே தவிர கோமாளியை இல்லை" என்று சி.டி. ரவி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
பெண்கள் மீது அதிக வன்கொடுமை நடைபெற்று வருவதாகவும், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் அமைச்சரே பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெண்கள் மீது வன்கொடுமை செய்வதை பாஜக ஒரு போதும் ஏற்காது என்று கூறினார்.
“வெற்றிவேல் ஏந்தி எதிரிகளை ஒழிப்போம் வளர்ச்சிக்கான பாதையில் தமிழகம் செல்ல பா.ஜ.க கூட்டணியை வெற்றி பெறச்செய்வோம். வீடு வீடாக சென்று தாமரையை மலரச் செய்வோம் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். திமுக காங்கிரஸ் இனி தேவையில்லை பாஜக மட்டுமே வேண்டுமென தமிழக மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துள்ளது” என்றார் சி.டி.ரவி தெரிவித்தார்.