டிரெண்டிங்

தலையில் பூசணிக்காய், கழுத்தில் காய்கறி மாலை - நூதன முறையில் சுயேச்சை வேட்புமனு தாக்கல்

தலையில் பூசணிக்காய், கழுத்தில் காய்கறி மாலை - நூதன முறையில் சுயேச்சை வேட்புமனு தாக்கல்

kaleelrahman

ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தலையில் பூசணிக்காய், கழுத்தில் காய்கறி மாலை என நூதன முறையில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆண்டிபட்டியை சேர்ந்த நீதிபதி என்ற காய்கறி வியாபாரி ஆண்டிபட்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது தலையில் பூசணிக்காய், கழுத்தில் காய்கறி மாலை அணிந்து ஆண்டிபட்டி நகர் பகுதியில் ஊர்வலமாக நடந்து வட்டாட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர், தேர்தல் நடத்தும் அலுவலரான சிவசுப்பிரமணியத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஆண்டிபட்டியில் தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். குழந்தைகள் உண்ணும் மிட்டாய்களுக்கு கூட இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று விலை நிர்ணயம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ள காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் இல்லை.

விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் அவற்றின் அவசியத்தை வலியுறுத்தியும், அந்த காய்கறிகள் தான் எனக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக காய்கறி மாலை அணிந்து வந்தேன்” என தெரிவித்தார்.