டிரெண்டிங்

கிரண்பேடிக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் இன்று ஸ்டிரைக்

கிரண்பேடிக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் இன்று ஸ்டிரைக்

webteam

பாரதிய ஜனதா கட்சியினர் 3 பேரை நியமன உறுப்பினர்களாக ரகசிய பிரமாணம் செய்துவைத்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கிய வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 
இன்று காலை முதல் புதுச்சேரி அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசுப் பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்பட்ட நிலையில், சென்னை செல்லும் பேருந்து ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதலை ஏற்படுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துணைநிலை ஆளுநர் மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 பாரதிய ஜனதா கட்சியினர் 3 பேரை, நியமன உறுப்பினர்களாக ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதேநேரம், அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் முழுஅடைப்புப்பிற்கு ஆதரவு தெ‌ரிவிக்கவில்லை.