'பாட்ஷா ரஜினிகாந்த் போல வாழ்வில் முன்னேறுங்கள்' ; என ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த பாஜக இளம்பெண் வேட்பாளர்களை அண்ணாமலை வாழ்த்தினார்.
சேலம் மாநகராட்சி மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுகவில் இளம்பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டது கேள்விப்பட்டபோது ஆச்சர்யப்பட்டேன். ஆனால் பின்னர்தான் அவர்கள் திமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் என்பது தெரியவந்தது. கோபாலபுரத்து மாடலை உள்ளாட்சி தேர்தல் வரை திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.
பாஜக சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ள இரண்டு இளம்பெண் வேட்பாளர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாட்ஷா ரஜினிகாந்த் போல் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாஜக சார்பில் சேலம் மாநகராட்சி 13வது கோட்டத்தில் நித்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவியும், 55 ஆவது கோட்டத்தில் சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியும் போட்டியிடுகின்றனர். கூட்டத்தின் முடிவில் அவர்களை மேடைக்கு அழைத்து அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்