டிரெண்டிங்

குவியும் ஆர்டர்கள்... கொடிகள், பதாகைகள், பேட்ஜ்கள் அச்சடிப்பு பணி அமோகம்!

குவியும் ஆர்டர்கள்... கொடிகள், பதாகைகள், பேட்ஜ்கள் அச்சடிப்பு பணி அமோகம்!

Sinekadhara

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அச்சகங்களும் பரபரக்க தொடங்கிவிட்டன. என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிப்பதற்கு கட்சி கொடிகளுக்கும், பதாதைகளுக்கும் தனி இடம் உண்டு.

சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை சார்ந்த தொழில்கள் அனைத்துக் கட்சிகளின் சின்னங்களையும் எந்த ஆரவாரமுமின்றி ஒரே இடத்தில் காண முடியும் என்றால், அது வாக்குப்பதிவு இயந்திரத்திலும், அச்சகத்திலும்தான். தேர்தல் அறிவிப்பு வெளியான போதே கட்சிகளுடன் அச்சகங்களும் பரபரப்பாகிவிட்டன. கொடிகள், பதாகைகள், சின்னம் பொருத்திய பேட்ஜ்கள், துண்டு பிரசுரங்கள் என அச்சடிப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. கொரோனாவால் முடங்கிப்போன அச்சகத் தொழிலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது தேர்தல்.

மதுரையில் உள்ள தனியார் அச்சகத்தில், தமிழகத்தை தவிர தேர்தல் நடைபெறும் மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கத்திலிருந்தும் ஆன்லைனில் ஆர்டர்கள் குவிகின்றன. அச்சகப் பணியாளர்கள் மட்டுமின்றி மைக் செட், பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள், இசைக் கலைஞர்கள், மேடைக் கலைஞர்கள் என தேர்தல் பரப்புரை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பிசியாகிவிட்டனர்.