டிரெண்டிங்

பிரதமரின் மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி வருமானம்

பிரதமரின் மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி வருமானம்

webteam

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் கடந்த 2 ஆண்டுகளில் அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ரூ.10 கோடி அளவுக்கு வருமானம் கிட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் இந்த தகவலைத் தெரிவித்தார். மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.5.19 கோடியும், 2015-16ம் ஆண்டில் ரூ.4.78 கோடியும் வருமானம் கிடைத்ததாக அமைச்சர், தனது பதிலில் தெரிவித்தார். மன்கிபாத் நிகழ்ச்சி நாடு முழுவதும் 18 மொழிகளில், 33 வட்டாரங்களில் ஒலிபரப்பப்படுவதாகவும், இதுதவிர ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளிலும் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதாகவும் ரத்தோர் தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.