டிரெண்டிங்

பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ட்விட்டரில் வெடித்த ஹேஷ்டேக் யுத்தம்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ட்விட்டரில் வெடித்த ஹேஷ்டேக் யுத்தம்!

EllusamyKarthik

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரைக்கான தமிழக வருகையையொட்டி, ட்விட்டரில் அவரை ஆதரித்தும் எதிர்த்தும் ஹேஷ்டேக் யுத்தமே நடந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து இன்று தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிறார். அவரது இந்த வருகையையொட்டி பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் அவரை எதிர்த்து 'Go Back Modi' என்ற ஹேஷ்டேகும், அவருக்கு ஆதரவாக TN Welcomes Modi, TN with Modi போன்ற ஹேஷ்டேகுகளும் ட்ரெண்ட் ஆகின்றன.

இவற்றின் பதிவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, மோடிக்கு எதிரான பதிவுகளே அதிகமாக இருப்பதை கவனிக்க முடிகிறது.

TN Welcomes Modi ஹேஷ்டேகில்... 

“அவரது வார்த்தைகள் வெறும் சொல் அல்ல செயல்” என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

“ஏற்கனவே திமுக லியோனி மற்றும் ஆ. ராசாவின் சர்ச்சை பேசிக்கினால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். தற்போது GO BACK என்பதை ட்ரெண்ட் செய்து தனக்கு தானே இறுதி சடங்கை செய்து கொள்கிறது திமுக” என பாஜக காரிய கமிட்டியை சார்ந்த மகேஷ் போஸ்ட் செய்துள்ளார். 

“தமிழகத்தின் செல்ல பிள்ளையான பிரதமர் மோடியை வரவேற்க தாராபுரம் தயாராக உள்ளது” என பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி. டி. ரவி போஸ்ட் செய்துள்ளார். 

Go Back Modi ஹேஷ்டேகில்...

“வைரத்தை தேட சென்றதால் சொக்கத்தங்கத்தை இழந்தோம்” என ட்விட்டர் பயனர் ஒருவர் போஸ்ட் செய்துள்ளார். 

“தென்னிந்தியர்களுக்கு மட்டும் தான் உங்களது அசலான நிறம் என்னவென்று தெரியும்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். 

“பிரிவினைவாதாம் மற்றும் வெறுப்புணர்வை முன்னெடுப்பவர்களை ஒருபோதும் பெரியார் மண் அனுமதிக்காது” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.