டிரெண்டிங்

இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு இதுதான் பலனா ? ரன் அவுட் சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா !

இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு இதுதான் பலனா ? ரன் அவுட் சர்ச்சை குறித்து ப்ரீத்தி ஜிந்தா !

jagadeesh

கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஆட்டத்தை பார்க்க வந்ததற்கு கிடைத்த பலன் இதுதானா என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய ட்விட்டரில் விரக்தியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

ஐபிஎல்லின் நேற்றையப் போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு அம்பயரின் தவறும் காரணமாகிப் போனது தெரியவந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு 19ஆவது ஓவரை டெல்லி வீரர் காகிசோ ரபாடா வீசினார். அப்போது ஒரு பந்தை பஞ்சாப் வீரர் ஜோர்டான், லாங் ஆன் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் பேட்டை சரியாக கிரீசுக்குள் வைத்த போதும் அவர் வெளியே வைத்து விட்டதாக கருதி அம்பயர் நிதின் மேனன் ஒரு ரன்னை குறைத்துவிட்டார்.

இந்த ரன் பஞ்சாப் அணியின் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த அணி 20 ஓவருக்குள்ளேயே வெற்றி பெற்றிருக்கும். ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறியிருக்கும். தவறான முடிவை கொடுத்த அம்பயர் நிதின் மேனனை முன்னாள் வீரர் சேவாக் உள்ளிட்டோர் குறை கூறியுள்ளனர். இது போன்ற நேரங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்ற சில வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா ட்விட்டர் பக்கத்தில் "இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உற்சாகத்துடன் பயணித்து இங்கு வந்தேன். இங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்துதல், 5 முறை கோவிட் டெஸ்ட் ஆகியவற்றை புன்னகையுன் எதிர்கொண்டேன். ஆனால் இந்த ரன் அவுட் விவகாரம் என்னை மிகவும் ஏமாற்றிவிட்டது. தொழில்நுட்பம் இருந்து என்ன பயன் அதனை பயன்படுத்த முடியாது. பிசிசிஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இதுபோல ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வேதனை" என பதிவிட்டுள்ளார்.