டிரெண்டிங்

’டைவர்ஸ் கேக்க இதுகூட நல்ல ஐடியாதான் போலவே’ Prank வீடியோவும், நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷனும்!

’டைவர்ஸ் கேக்க இதுகூட நல்ல ஐடியாதான் போலவே’ Prank வீடியோவும், நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷனும்!

JananiGovindhan

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சில prank வீடியோக்கள் எரிச்சலூட்டுவையாக இருந்தாலும், பல பிராங்க் வீடியோக்கள் நகைப்பை ஏற்படுத்துவதை தவறாது. மனைவியை வெறுப்பேற்றுவதற்காக கணவன் செய்யும் குறும்புத்தனமான பிராங்க் வீடியோக்களெல்லாம் இணையவாசிகளை கவர்வதில் கெட்டிதான்.

அந்த வகையில், கணவன் ஒருவர் மனைவியின் மெத்தைக்கு பதில் அதே சைஸில், பாத் டப்பை வைத்து அதில் தண்ணீரை நிரப்பி, அதன் மேல் பெட் ஷீட்டை வைத்து மூடி, மெத்தை போல இருப்பதற்காக தலையணையையும் வைக்கிறார்.

சில மணிநேரங்கள் கழித்து செல்ஃபோன் பேசியபடியே மனைவி பெட்டில் வந்து உட்காரும் போது நீர் நிரப்பப்பட்ட அந்த பாத் டப்பில் கவிழ்ந்து விழுகிறார். இந்த வீடியோதான் நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறும் 32 நொடிகளே கொண்ட அந்த வீடியோ 9.9 மில்லியன் அதாவது கிட்டத்த ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், பயனர் ஒருவர், இந்த வீடியோவின் அடுத்த பார்ட் இருக்கும் அது எப்போது ஷேர் செய்யப்படும் என கேட்க, அதற்கு மற்றொரு பயனர், அடுத்த வீடியோ போடுவதற்கு அந்த கணவர் உயிரோடு இருக்க வேண்டும் என நக்கலடித்திருக்கிறார்.

ALSO READ: 

இன்னொரு பயனர், இந்த பிராங்கிற்கு பிறகு அந்த கணவர் உயிரோடு இருந்தால் அதுதான் உண்மையான காதலாகும் என்றும், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விவாகரத்து கேட்க ஆக்கப்பூர்வமான வழி இதுதான் போல எனவும் ட்வீட்டியிருக்கிறார்கள்.

மேலும், இதை பார்த்தால் பிராங்க் மாதிரி தெரியவில்லை. ஏதோ பேசி வைத்து ட்ரெண்ட் ஆவதற்காக நடத்தப்பட்ட ஸ்கிரிப்டட் போன்று இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.