டிரெண்டிங்

பாஜக எம்பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் வக்கீல் நோட்டீஸ்

பாஜக எம்பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் வக்கீல் நோட்டீஸ்

webteam

கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் அவதூறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கர்நாடக மூத்த பத்திரிகையாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் மர்மான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை அவர் வீட்டு முன்பாகவே நடந்தது. இது தொடர்பாக மோடி மவுனம் காப்பதாகவும், தன்னைவிட மோடி சிறந்த நடிகராக பார்க்கிறார் என்றும் விமர்சித்தார் பிரகாஷ்ராஜ்.

இதனை எதிர்த்து பாஜகவை சார்ந்த மைசூரு-குடகு எம்.பி.பிரதாப் சிம்ஹா தொடர்ந்து பிரகாஷ்ராஜை விமர்சிக்க தொடங்கினார். பிரதாப் சிம்ஹா "கடந்த 2004ம் ஆண்டு பிரகாஷ் ராஜின் மகன் இறந்துவிட்டான். மனைவியை தவிக்கவிட்டு அவர் ஒரு பெண் நடன இயக்குநர் பின்னால் அவர் சுற்றி வந்தார். இப்படிப்பட்ட நபரான இவர், மோடி, ஆதித்யநாத் குறித்து பேச என்ன உரிமை இருக்கிறது? தகுதி இருக்கிறது? கன்னடத்தில் அவர் பெயர் பிரகாஷ்ராய். ஆனால் தமிழில் பிரகாஷ்ராஜ். தனது தேவைக்கு தக்க அடையாளத்தை அவர் மாற்றிக் கொள்கிறார். காவிரி பிரச்னையில் தமிழகத்தை ஆதரித்து பேசினார் அவர்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்களை பிரதாப் சிம்ஹா அவரது ஃபேஸ்புக்கிலும் தெரிவித்திருந்தார். 
இதை தொடர்ந்து பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக அவதூறு வக்கீல் நோட்டீஸ்  அனுப்பி உள்ளார் பிரகாஷ்ராஜ்.