டிரெண்டிங்

டாய்லெட் சீட்டில் சிக்கிய 2 வயது குழந்தை; பதறிய தாய்.. அலேக்காக மீட்ட தீயணைப்புத்துறையினர்

டாய்லெட் சீட்டில் சிக்கிய 2 வயது குழந்தை; பதறிய தாய்.. அலேக்காக மீட்ட தீயணைப்புத்துறையினர்

JananiGovindhan

டாய்லெட் பயிற்சி கொடுக்கப்பட்ட 2 வயது குழந்தை டாய்லெட் சீட்டுக்குள் மாட்டிக்கொண்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து மீட்கும் அளவுக்கு இங்கிலாந்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிழக்கு இங்கிலாந்தின் வால்ஸெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கே ஸ்டீவர்ட் (37). இவர் தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தை ஹார்பெருக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுக்க அழைத்துச் சென்றிருக்கிறார். 

அங்கு கழிவறையில் இருந்த ஹார்பெர் திடீரென “அம்மா.. நான் மாட்டிக்கிட்டேன்..” என அலறும் சத்தம் கேட்டு கே ஸ்டீவர்ட் பதறிப்போய் பார்த்திருக்கிறார்.

அப்போது டாய்லெட் சீட்டில் ஹார்பெர் சிக்கிக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டீவர்ட்டும் அவரது 16 வயது மகள் ஷானோனும் ஹார்பெரை மீட்க போராடி இருக்கிறார்கள்.

டிஷ்வாஷ் சோப்பு போட்டொ ஹார்பெர் கழுத்தில் சிக்கிய டாய்லெட் சீட்டை எடுக்க முயற்சித்தும் பலனளிக்காததால் ஷானோன் உடனடியாக Tyne and Wear Fire and Rescue Service என்ற அந்த பகுதி தீயணைப்புத்துறையை அனுகி சம்பவ இடத்துக்கு வர வைத்திருக்கிறார்.

இதனையடுத்து உடனே விரைந்த தீயணைப்புத்துறையினர் டாய்லெட் சீட்டில் சிக்கியிருந்த குழந்தை ஹார்பெருக்கு வலிக்காமல் சிறிது நேரத்திலேயே அலேக்காக அதனை அகற்றி குழந்தையை மீட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள கே ஸ்டீவர்ட், “தீயணைப்புத்துறையினர் வந்த பிறகுதான் எனக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. ஹார்பெரை மீட்க நாங்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தோம். எதுவுமே கைகூடவில்லை.

ஆனால் தீயணைப்புத்துறையினர் சுலபமாக ஒரு ப்ளூ லைட்டை மட்டுமே அடித்து எல்லா குழந்தைகளையும் ஆசுவாசப்படுத்தி ஹார்பெரை மீட்டுவிட்டார்கள்” எனக் கூறியிருக்கிறார். மேலும் குழந்தையை மீட்ட போட்டோக்களும் பகிரப்பட்டு வருகிறது.