சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
துறைமுகம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த சேகர்பாபு தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். இங்கு பாஜக சார்பில் வினோஜ்.பி.செல்வம் போட்டியிடுகிறார். இவர் கடந்த 15-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரைக் குறிப்பிடாமல் மாற்றுப்பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது. இதை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபித்ததை அடுத்து வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆவணங்களை தேர்தல் அலுவலகர்கள் சரிபார்த்த நிலையில் வினோஜ் பி செல்வத்தின் வேட்புமனுவை ஏற்றதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தனர்.