டிரெண்டிங்

எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது - சிங்கப்பூரில் மோடி பேச்சு

rajakannan

சிங்கப்பூர் நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இஸ்தானா மாளிகையில் அந்நாட்டு பிரதமர் லீ சீயன் லூங்கை மோடி சந்தித்து பேசினார். நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார். 

சமூகப் பாகுபாடுகளை தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் பெருமளவு தவிர்க்க முடியும் என்ற பிரதமர், 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்றும் அதை சாதித்துக் காட்ட சவால்களை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பெரும் தடையாகப் பார்க்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, நாளடைவில் சமூகப் பாகுபாட்டை நீக்க இந்தத் தொழில்நுட்பங்கள் உதவும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், நாங்யாங் பல்கலைக் கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ரோபோக்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தார்.

இதனையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மாட்டிஸை சிங்கப்பூரில் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார்.