டிரெண்டிங்

“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்

“டெல்லி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ஷீலா தீக்ஷித்” - பிரதமர் மோடி இரங்கல்

rajakannan

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய இரங்கல் செய்தியில், “டெல்லி முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான ஷீலா தீக்ஷித் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆட்சி காலத்தில்தான் தலைநகர் பலவித மாற்றங்களுக்கு ஆட்பட்டது. அந்த மாற்றங்கள் அவரை எப்போது நினைகூறும். அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டரில், “ஷீலா தீக்ஷித் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணக்கமான மற்றும் மரியாதைக்குரிய ஆளுமையாக திகழ்ந்த அவர், டெல்லியில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘தனது அன்பான மகளை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது’ என்று ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவருடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவு பாராட்டி வந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் டெல்லி மக்களுக்கும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

“டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவராக இருந்தவர். அவரது இணக்கமான குணத்தால் அறியப்பட்டவர். கட்சி எல்லையை தாண்டி எல்லோராலும் மதிக்கப்பட்டவர். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.