டிரெண்டிங்

ஓபிசி அடையாளத்தை மோடி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்: நானா படோல்

webteam

பிரதமர் மோடி ஓபிசி அடையாளத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார் என்று பதவியை ராஜினாமா செய்த பாஜக முன்னாள் எம்பி நானா படோல் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் பிரச்னையில் உதவாத மத்திய அரசையும், மஹாராஷ்டிர மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து, கடந்த வெள்ளிக்கிழமை தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து, பாஜக கட்சியிலிருந்தும் வெளியேறிய நானா படேல் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. பிரதமர் மோடி அனைத்து விவகாரங்களிலும் இரட்டை வேடம் போடுகிறார். அவர் தனது ஓபிசி அடையாளத்தை அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார். ஆனால், அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதுவும் செய்யவில்லை. 

கடந்த ஆண்டும் பிரதமர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதற்காக மோடி என்னை திட்டினார். மேலும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அது தேவையில்லை என்று கூறினார். தற்போது, தனது ஓபிசி அடையாளத்தை வாக்குக்காக பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.