மம்தா பானர்ஜி கையாண்டுவரும் வாக்கு வங்கி அரசியல் உத்திதான் மேற்கு வங்கத்துக்குள் அண்டை நாட்டினர் ஊடுருவல்கள் அதிகரிக்க காரணம் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினரை மம்தா அரசு மதிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். திரைமறைவு மாவோயிஸ்ட் செயல்பாடுகளை மம்தா அரசு ஊக்குவித்து வருவதாகவும், பிரதமர் விமர்சித்தார். மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வந்து மாநிலத்தின் வளர்ச்சி தொடங்கிவிடும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
கொரோனா காலகட்டத்தில்கூட மம்தாவின் அரசு லஞ்ச, ஊழலில் திளைத்ததாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். இதற்கிடையில் பஷிம் மேதினிபூரில் பரப்புரை மேற்கொண்ட மம்தா, ஹெலிகாப்டர்களிலும் விமானத்திலும் மூட்டைமூட்டையாக பணத்தை கொண்டுவந்து வாக்காளர்களுக்கு கொடுத்து தேர்தலில் வெல்ல பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.