திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு போட்டோ, வீடியோ எடுப்பது சர்வ சாதாரணமாக பொது வெளியில் தெரிந்தாலும், விருந்தினர்கள், மணமக்கள் ஆகியோருக்கு ஏற்றவாறு படம் பிடிக்கும் சிரமம் அந்த வேலையை செய்பவர்களுக்கே தெரியும்.
அந்த நிகழ்ச்சியின் முக்கியமான தருணத்தின் போது அதில் ஏதேனும் ஒரு நிகழ்வு தவறினாலும் அது அந்த போட்டோகிராஃபர் குழுவுக்கே பெரிய இழுக்காக போய்விடும். அப்படியான சம்பவம் குறித்த வீடியோவை பற்றிதான் பார்க்க போகிறோம்.
ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், திருமண நிகழ்வை போட்டோ எடுக்கவிருந்த போட்டோகிராஃபர் மணமகன் மணமகளை கரம் பிடிக்கும் நிகழ்வை ஒரு சிறுவனால் எடுக்க முடியாமல் போயிருக்கும்.
அதன்படி அந்த மணமகன் மணமகளின் நெற்றியில் முத்தமிடும் அந்த தருணத்தை போட்டோ எடுக்க முயலும் போது திடீரென ஒரு சிறுவன் கேமிரா முன் குறுக்கிடுகிறான். அந்த சிறுவனை தள்ளிவிட்டு மீண்டும் போட்டோ எடுக்கலாம் என எத்தனிக்கும் போது அந்த நிகழ்வே முடிந்திருக்கிறது.
இதனால் அந்த போட்டோகிராஃபர் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கியபடி பின்னால் திரும்பி பார்க்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ ‘உனக்காவது ஒழுங்க முடிந்ததா?’ என மற்றொரு கேமிராமேனை கேள்வி கேட்கும்படி அந்த போட்டோகிராஃபர் திரும்பி பார்க்கிறார்” என்றும், “ ‘வந்து உங்க மகனை கட்டுப்படுத்துங்க’ என நிகழ்ச்சிக்கு வந்தவரை கேட்பது போல இருக்கிறது.” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.