டிரெண்டிங்

சூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு

சூலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுப்பு

rajakannan

சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் நேற்று கமல் பங்கேற்ற கூட்டத்தில் அவரை நோக்கி சிலர் காலணி வீச்சில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில் முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேடையை நோக்கி கற்களை வீசிய இரண்டு நபர்களை கூட்டத்திலிருந்த மக்கள் நீதி மய்யத்தினர் பிடித்து சரமாரியாக தாக்கினர். போலீசார் அந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

இதனிடையே, சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், காவல்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.