டிரெண்டிங்

அபின் கடத்தல் விவகாரம் : பாஜகவிலிருந்து அடைக்கலராஜ் நீக்கம்

அபின் கடத்தல் விவகாரம் : பாஜகவிலிருந்து அடைக்கலராஜ் நீக்கம்

webteam

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவித்ததாக பெரம்பலூர் பாஜக நிர்வாகி அடைக்கலராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தரப்பிலிருந்து மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான அடைக்கலராஜ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினருமான அடைக்கலராஜ் உள்ளிட்ட நான்கு பேர் மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் அபினை விற்பதற்காக திருச்சியில் காத்திருப்பதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடைக்கலராஜ் உள்ளிட்ட நான்கு பேரையும் அவர்களுக்கு உதவிய திருச்சியைச் சேர்ந்த ஒருவரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான அபினும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.