டிரெண்டிங்

“அல்வா கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் அல்வா கொடுக்க வேண்டும்”- செல்லூர் ராஜூ

“அல்வா கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் அல்வா கொடுக்க வேண்டும்”- செல்லூர் ராஜூ

kaleelrahman

அல்வா கொடுத்து ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகவுக்கு மக்கள் அல்வா கொடுக்க வேண்டும். மதுரைக்காரன் திருப்பி கொடுக்காமல் விட மாட்டான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பரப்புரையில் பேசினார்.

மதுரை மாகராட்சி 76வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து முன்னாள அமைச்சர் செல்லூர் ராஜூ அந்த வார்டுக்குட்பட்ட திடீர்நகர் பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசும்போது...

“மதுரைக்கு அள்ளிக் அள்ளிக் கொடுத்தவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். திமுக கொடுத்த 526 வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றி உள்ளார்களா? கேஸ் மானியம், கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் டீசல் விலை, மகளிருக்கு 1000 ரூபாய் என எதையுமே செய்யவில்லை.

போனமுறை பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாயை எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். ஆனால் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் சொன்னார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஸ்டாலின் பொங்கல் தொகுப்போடு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாரா? ஐந்து பைசா கூட கொடுக்கவில்லை.

பொங்கல் தொகுப்பை சரியாக கொடுத்தார்களா? 21 பொருட்கள் எனச்சொல்லிவிட்டு 11 பொருள்கள் கூட இல்லை. பொங்கல் தொகுப்பில் பருத்திக் கொட்டையை கொடுத்துள்ளனர். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள அப்பாவும், மகனும் சொகுசாக உள்ளனர்.

உப்புமா கிண்ட ரவை வேண்டும், அல்வா கிண்ட கோதுமை மாவு வேண்டும். வடை சுட பருப்பு வேணும், தோசை சுட மாவு வேணும்.. ஆனால் வாயிலேயே வடையும், அல்வாவும் செய்பவர்கள் திமுகவினர். நமக்கு தற்போது அல்வா கொடுத்துவிட்டு ஆட்சியில் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் மதுரைக்காரன் சும்மா விட மாட்டான். திரும்பி கொடுத்துவிடுவான். மதுரைக்காரனிடம் அன்பை கொடுத்தால் அன்பை கொடுப்பான். அடியை கொடுத்தால் திருப்பி அடியை கொடுப்பான். நமக்கு அல்வா கொடுத்ததால் இந்த தேர்தலில் திமுகவுக்கு நாம் அல்வா கொடுக்க வேண்டும். நாம் இரட்டை இலைக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் உங்களை கொரோனா காலத்தில் வந்து பார்த்தாரா? அவர் பெரிய பணக்காரர், ஜமீன்தாரர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.