டிரெண்டிங்

”இனியாவது கனிவுடன் இருங்களேன்..”- வைரலாகும் ஆசிரியருக்கு மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் மேசேஜ்

”இனியாவது கனிவுடன் இருங்களேன்..”- வைரலாகும் ஆசிரியருக்கு மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் மேசேஜ்

JananiGovindhan

பள்ளிக் காலங்களில் விருப்பமான ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்ட பள்ளியை விட்டுச் சென்றால் மாணவர்கள் பலரும் அந்த ஆசிரியரை சூழ்ந்து அழுது, கட்டியணைத்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்கையில், தன்னுடைய பள்ளி காலத்தின் போது தன்னை மட்டம்தட்டி பேசிய ஆசிரியர் ஒருவருக்கு பெண் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்து “நீங்கள் நினைத்தது போல, கூறியது போல இல்லாமல் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்வி நிலையத்தில் எனக்கு பிடித்த படிப்பை படிக்கப்போகிறேன். இனிமேலாவது கனிவுடன் இருக்க பழகுங்கள். குறிப்பாக உங்களது உதவியை நாடும் மாணவர்களிடம் கனிவுடனும் இருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்த ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய டீச்சருக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என நானும் என்னுடைய தோழியும் நினைத்திருந்தோம். அதற்கான நாள் இப்போதுதான் வாய்த்திருக்கிறது என கேப்ஷனும் இட்டிருக்கிறார்.

இந்த பதிவு ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு நெட்டிசன்களிடையே படுவைரலாகியிருக்கிறது. மேலும், தங்களுடைய பள்ளி காலங்களின் போது ஆசிரியர்கள் தங்களை இழிவுபடுத்தி பேசியது பற்றியும் பகிர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், வைராலன பதிவில் உள்ள வாட்ஸ் அப் மெசேஜிற்கு அந்த ஆசிரியர் பதிலளித்துள்ளார் எனவும் இணையவாசிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் அப்பெண் ஷேர் செய்திருக்கிறார்.

அதில், “நீ இப்படி தேர்ச்சி பெறுவதற்கான பெருமையும் என்னைத்தான் சேரும்” என அந்த ஆசிரியர் பதிலளித்திருக்கிறார். அந்த பதிவும் பலரால் ஷேர் செய்யப்பட்டதோடு விமர்சன பதிவுகளும் இடப்பட்டிருக்கிறது.