டிரெண்டிங்

“மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு” - பாரிவேந்தர் அறிவிப்பு

“மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு” - பாரிவேந்தர் அறிவிப்பு

Rasus

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதுமட்டுமில்லாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஐஜேகேவின் ஆதரவை தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “ஐஜேகேவின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவைத்தான் மு.க.ஸ்டாலினை சந்தித்து தெரிவித்துள்ளேன். தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஸ்டாலினால் தான் தரமுடியும். தற்போதைய அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறது. எனவே அந்தக் கூட்டணியை தற்போது தொடர முடியாது.” எனத் தெரிவத்தார்.