உயர் கல்வி நிலையங்களில் மதவாதம், ஜாதி ரீதியான தாக்குதல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், "சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு காரணமான பேராசியர் ரவிக்குமார், சிவராஜ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். அரசு கவின் கல்லூரி புனரமைக்காமல் இருக்கிறது. பழமையான கல்லூரியை சீரமைத்து, தகுதியான பேராசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும். உயர் கல்வி நிலையங்களில் மதவாதம், ஜாதிய ரீதி தாக்குதல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும்" என வலியுறுத்தினார்.