டிரெண்டிங்

இந்திய மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Rasus

இந்திய மக்கள் அனைவருக்கும் போதிய உணவு கிடைப்பதில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்திய மக்கள் தொகையில், ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் வருடத்தில் பல நாட்கள் பட்டினியில் தவிப்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறியுள்ளார். யுனிசெப் அமைப்பின், 2017-ஆம் ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையில், இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மைகளை அரசு ஏன் மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், இந்திய மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆனால்,அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு உணவு பாதுகாப்புச் சட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததாக கூறியுள்ள ப.சிதம்பரம், ஆனால், அதைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அதை கட்டாயமாக்கி அமல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். பட்ஜெட் ஆவணங்களின்படி, 2015-16-ஆம் ஆண்டுகளில் அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு லட்சத்து 34ஆயிரத்து 919 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் கூறியிருக்கிறார்.