டிரெண்டிங்

கோமாளி வேடமிட்டு கொரோனா அறிவிப்பு : சோஷியல் மீடியாவை அலறவிட்ட பெண் அதிகாரி!

கோமாளி வேடமிட்டு கொரோனா அறிவிப்பு : சோஷியல் மீடியாவை அலறவிட்ட பெண் அதிகாரி!

webteam

ஓரேகனில் பெண் சுகாதார அதிகாரி ஒருவர் கோமாளி வேடம் அணிந்து கொரோனா அறிவிப்பை வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ஓரேகன் மாநிலத்தில் பொது சுகாதாரத்துறை புதுமையான வகையில் கொரோனா அறிவிப்பை வெளியிட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது பெண் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா அறிவிப்பை வெளியிட்டார். அவர் கோமாளி வடிவில் முகத்தில் கலர் பூசிக்கொண்டு, மஞ்சள் நிற பேண்ட்டும், வெள்ளை நிற புள்ளிகளை கொண்ட கறுப்பு கலர் சட்டையும் சிவப்பு கலர் டையும் அணிந்து கொண்டு அறிவிப்பை வெளியிடுகிறார்.

அதில், “இன்றைய நிலவரப்படி, ஒரேகனில் 38,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 390 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 608 பேர் உயிரிழந்துள்ளனர்” என வீடியோவில் தெரிவிக்கிறார். பின்னர், அவர் அறிவிப்பை வெளியிட்டதும் முகக்கவசம் அணிந்து கொள்கிறார். இதனிடையே அவரின் அருகே ஒருவர் சைகை மொழியில் அதே அறிவிப்பை மொழிபெயர்த்து கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டதட்ட 10 லட்சம் பார்வையாளர்கள் இதை பார்த்துள்ளனர். மேலும், இந்த வீடியோவுக்கு சிலர் ஆதரவு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.