டிரெண்டிங்

தேனி தொகுதியில் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை

rajakannan

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 338 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 94 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் குமார் 11,007 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 19 ஆயிரம் 670 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,08,663 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 41,297 வாக்குகள் பெற்றுள்ளார்.